vazhi thavari pona nanba

வழிதவறி போன நண்பா கலங்காதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வழிதவறி போன நண்பா கலங்காதே
வழி மாறி போன மனமே திகையாதே – 2
மறவாதே ஓ நண்பனே
உனக்காய் இயேசு காத்திருக்கிறார்
மனம் திரும்பு நீ நண்பனே
உன் நினைவாய் அவர் இருக்கிறார் – 2
1. உலகம் உன்னை அழைத்ததோ
நீ நினைத்த யாவும் தோல்வியோ
நீ நம்பிய அனைவரும் மறந்தனரோ
இனி சாவே மேல் என் நினைத்தாயோ – 2
2. உறவுகள் உன்னை மறந்ததோ
நீ செய்த நன்மைகள் புதைந்ததோ
உன் தாயும் தந்தையும் வெறுத்தனரோ
இனி தஞ்சம் யார் என்ன தவித்தாயோ – 2
3. உன்னை என்றும் நேசிக்கும்
தகப்பன் ஒருவர் இருக்கிறார்
உன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து
நீ இருப்பதுபோல் உன்னை நேசிக்கிறார் – 2
ஒரு முறை இயேசுவை கூப்பிடு
உன் கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
ஒரு முறை நீ கூப்பிடு
உன் கவலைகள் யாவையும் நீக்குவார்
ஒரு முறை இயேசுவை கூப்பிடு
உன் கரம்பிடித்து அவர் தூக்குவார்
ஒரு முறை நீ கூப்பிடு
புது மனிதனாய் அவர் மாற்றுவார்