vazhi sonnavar vazhiyumanavar

வழி சொன்னவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வழி சொன்னவர் வழியுமானவர்
வழி, சத்தியம், ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர்
மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனிவர் இயேசு
இயேசுவே தெய்வம், ஒரே ஒரு தெய்வம்
இயேசுவே தேவன், மெய்யான தேவன்
இயேசுவே தெய்வம், தேடி வந்த தெய்வம்
இயேசுவே தேவன், மீட்க வந்த தேவன்
இயேசுவே ராஜா, ராஜாதி ராஜா
இயேசுவே இரட்சகர், உயிர் ஈந்த இரட்சகர்
இயேசுவே ஆண்டவர், உயிர்த்தெழுந்த ஆண்டவர்
இயேசுவே கர்த்தராம், கர்த்தாதி கர்த்தராம்
இயேசுவே ராஜனாம், ராஜாதி ராஜனாம்
இயேசுவே ராஜா, ராஜாதி ராஜா