varuven enravar vanthituvar

வருவேன் என்றவர் வந்திடுவார்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வருவேன் என்றவர் வந்திடுவார்
வருத்தம் நீங்கி மகிழ்ந்திடுவாய்
உழைப்பின் களைப்பை மாற்றிடுவார்
மகிமைக்குள்ளாய் நடத்திடுவார்
வருகிறார் வருகிறார் என் இயேசு வருகிறார்
நீதியாய் நியாயம் தீர்க்க வருகிறார்
1. சோர்ந்துப் போகாதே வீழ்ந்து போகாதே
மயங்கிப் போகாதே மறுத்துப் போகாதே – வருகிறார்
2. உறக்கம் கொள்ளாதே பின்மாற்றம் அடையாதே
நம்பிக்கை இழக்காதே மௌனமாயிருக்காதே – வருகிறார்
3. உலகம் பகைத்தாலும் துன்பப்படுத்தினாலும்
கொலை செய்ய துணிந்தாலும் பயந்து ஓடாதே – வருகிறார்