varuvaai kolgatha malaikku song lyrics

வருவாய் கொல்கதா மலைக்கு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

வருவாய் கொல்கதா மலைக்கு
அங்கு பெறுவாய் பேரின்ப வாழ்வினை உனக்கு
வருவாய் கொல்கதா மலைக்கு
பாவத்தைப் போக்கிடும் பரிசுத்த பலியாய் (2)
பாவியைப்போல் தொங்கும் பரிசுத்தர் அருகில்
வருவாய் கொல்கதா மலைக்கு
யாவரும் கைவிடத்தனியே ஒரு கள்ளனைப் போல்
இரு கள்ளர்கள் நடுவே யாவரும் கைவிடத்தனியே
மாபெரும் பாதகம் யாவையும் சுமந்தே (2)
பாதகன் போல் அவர் பதைத்திடல் பாராய்
வருவாய் கொல்கதா மலைக்கு
அடிமையின் ரூபமே எடுக்கார் உனகடிமையின் களைதனை
மற்றுமே முறிப்பார் அடிமையின் ரூபமே எடுத்தார்
முடிந்தது என்றார் தலையையும் சாய்த்தார் (2)
காடியை வாங்கிப் பின் ஜீவனைக் கொடுத்தார்
வருவாய் கொல்கதா மலைக்கு
ஆட்டினைப்போல் வழி தப்பி தம் தம் வழியே போனவர்
தமையே திருப்பி ஆட்டி னைப்போல் வழி தப்பி
மீட்டிடும் மாசற்ற தேவாட்டுக்குட்டி (2)
பாதமே தேடி நீ பரலோகம் சேரு
வருவாய் கொல்கதா மலைக்கு
பாவம் கொடிதென எண்ணி அதன் சாபமும் கொடிதென
உள்ளம் கலங்கி பாவம் கொடிதென எண்ணி
வாடுவோர் தம்மை வரவழைப்பவராய் (2)
பாடுகள் சுமந்திடும் பரிசுத்தரருகில்
வருவாய் கொல்கதா மலைக்கு