Varushathai Umathu Nanmaiyal Lyrics

வருஷத்தை உமது நன்மையால்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

வருஷத்தை உமது நன்மையால் முடிசூட்டுகிறீர்
உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது -2
நீதிமான்களே கர்த்தருக்குள் களி கூருங்கள்
துதி செலுத்துவது செம்மையானவர்களுக்கு தகும்
1. சுரமண்டலத்தினால் வீணையினால்
கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
ஆனந்த கீதங்கள் வாத்தியமும் முழங்க
அவருக்கே புதுப்பாட்டை பாடிடுவோம்
2.கர்த்தரின் வார்த்தை உத்தமமும்
அவரின் செய்கையெல்லாம் சத்தியமுமாய்
அவர் ஆலோசனை நித்திய காலமும்
தலைமுறை தலைமுறையாக நிற்கும்
3. கர்த்தரே நமக்கு அடைக்கலமும்
நாம் நம்பியிருக்கும் கன்மலையுமாம்
நீரோ மாறாதவர் உமது ஆண்டுகள்
முடிந்து போகாமல் நிலைத்து நிற்கும்