Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics

வருஷத்தை நண்மையினால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

வருஷத்தை நண்மையினால் முடிசூட்டி மகிழ்கின்றீர்
பாதைகள் எல்லாம் நெய்யாய் பொழிகின்றது – 2
கண்மணி போல் காத்தீரையா
கரம் பிடித்து வழி நடதினீரே -2
உந்தன் அன்பை எண்ணி பாட ஓர் நாவு போதாதையா
நன்றி அய்யா நாள் முழுதும்
நன்மை செய்த தேவனுக்கு – 2
தீமைகள் எதுவும் அனுகாமலே
உம் கரத்தின் நிழலில் காத்தீரையா
பாதம் கல்லில் இடராமலே
உம் கரத்தில் ஏந்தி சுமந்தீரையா
என் கண்ணீரை எல்லாம் துடைத்தீரையா
உம் கரத்தினால் என்னை அனைத்தீர்ரையா
நம்பினோர் என்னை ஒதுக்கினாலும்
விலகாமல் துணையாய் நின்றீரையா
எதிரிகள் என்னை சூழ்ந்திட்டாலும்
எனக்காக யுத்தம் செய்தீரையா
ஒருவழியாய் புறப்பட்டு வந்தவர்கள்
ஏழு வழியாய் ஓட செய்தீர்