varukinren anpay iraimakane – Varukintrean anbaai iraimaganae

வருகின்றேன் அன்பாய் இறைமகனே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

வருகின்றேன் அன்பாய் இறைமகனே – Varukintrean anbaai iraimaganae
பாடல் வரிகள் – காணிக்கை பாடல்
வருகின்றேன் அன்பாய் இறைமகனே
தருகின்றேன் என்னையே காணிக்கையாய் – 2
தந்தாய் உன்னையே பலியாக
ஏற்பாய் என்னையே கனிவாக – 2
1. வானமே உமது சிங்காதனம்
பூமியே உமது பாதநிலை – 2
இதயத்தை தவிர எதை தருவேன் – என்
இதயத்தை தவிர எதை தருவேன்
எளிமையின் காணிக்கை ஏற்றருள்வீர் – என்
எளிமையின் காணிக்கை ஏற்றருள்வீர்
2. அன்பை பொழியும் ஆண்டவரே – உம்
சாட்சியாய் திகழ்ந்திட விழைகின்றேன் – 2
உடல் பொருள் ஆவி அனைத்தையுமே – என்
உடல் பொருள் ஆவி அனைத்தையுமே
எளிமையின் காணிக்கை ஏற்றருள்வீர் – என்
எளிமையின் காணிக்கை ஏற்றருள்வீர்