1.varththai athu niraiverum – um

வார்த்தை அது நிறைவேறும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.வார்த்தை அது நிறைவேறும் – உம்
வார்த்தை அது உருவாக்கும் –உம்
வார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும்,
பெலனே மருந்தே எந்நாளும் எனக்கு
2. தாவீதுக்கும் வார்த்தை நிறைவேறிற்று
சவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்
உடன் இருந்தோர் கொல்ல முற்பட்டாலும்
தாமதமானாலும் துதித்து பாடி
தேவனை உறுதியாய் பற்றிகொண்டான்
3. ஆபிரகாமுக்கும் நிறைவேறிற்று
பெலவீன சரிரம் எண்ணாமலே
நிறைவேற ஏது இல்லாதபோதும்
நிறைவேற்ற வல்லவர் என்று சொல்லி
துதித்து விசுவாச வீரனானான்
4. வாக்குதத்ததை பற்றிகொண்டு
இயேசுவையே நான் நோக்கிபார்த்து
விசுவாசத்தோடும் பொறுமையோடும்
உன்னத நோக்கம் நிறைவேறவே
துதி செய்து மேற்கொண்டு சுதந்தரிப்பேன்