Varachiyana En Vaalvai Valamaai Song lyrics

வறட்சியான என் வாழ்வை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வறட்சியான என் வாழ்வை
வளமாய் மாற்ற வல்லவர்
மங்கிஎரியும் திரியையேற்றி
ஒளி விளக்காய் மாற்றுபவர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
மாற்றுபவர் மாறுதல் தருபவர்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
1.உள்ளதை நீர் அவமாக்க
இல்லாததை தெரிந்து கொண்டீர்-நீர் நல்லவர்
2.பெலவான்கள் வெட்கப்பட
பெலவீனரை தெரிந்தெடுத்தீர்-நீர் நல்லவர்
3.ஞானிகளை நீர் வெட்கப்படுத்த
பயித்தியங்களை நீர் தெரிந்து கொண்டீர்-நீர் நல்லவர்