vanthare aavi seesharkal mele – Vantharae Aavi Sheesharkal Mealae

வந்தாரே ஆவி சீஷர்கள் மேலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வந்தாரே ஆவி சீஷர்கள் மேலே – Vantharae Aavi Sheesharkal Mealae
பல்லவி
வந்தாரே ஆவி;-சீஷர்கள் மேலே
வந்தாரே ஆவி.
அனுபல்லவி
வந்தனர், அக்கினிச் சுந்தர நாவென,
நிந்தை அடைந்துளம் நொந்தவர் மேலே;
சரணங்கள்
1.எல்லாரும் ஒருமனம் அல்லாது, வேறில்லாமல்,
செல்லாமல் வீடுவிட்டு, ‘புல்லர்கள் தமக்கஞ்சி,
வல்லவனான யேசு நல் அடியை வணங்கி,
அல்லும் பகலும் ஏற்றும் மெல்லிய சீஷர் மேலே-வந்
2.அண்டம் அகன்று, பூ மண்டலந்தனில் ஆவி
எண்டிசையும் முழக்கம் கொண்டிடவே, பலத்த
‘சண்டமாருதம் போலக் கண்டவர் பிரமிக்க,
தொண்டர் இருந்த வீட்டை மண்டல் செய்து நிரப்பி -வந்
3.கூடிய ஜனங்களும் நாடி, கலிலேயர்
தேடிப் பிடிக்கினும் ஓடி ஒளிப்பவர்
பாடி, எம் பாஷையிலே நீடிய பிரசங்கம்
சூடிய தேதென, சாடி அதிசயிக்க