Vandhuvedu Yesuvedam

வந்துவிடு இயேசுவிடம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Vandhuvedu Yesuvedam – வந்துவிடு இயேசுவிடம்
வந்துவிடு இயேசுவிடம்
தந்துவிடு உன் வாழ்க்கையை
அவர் தான் உந்தன் தகப்பனே
உன் வாலிபம் மாயையே
உன்னை அழைக்கிறார்
உன்னை அழைக்கிறார்
அவரிடம்
ஐயையோ வேதனை
ஐயையோ சோதனை
இயேசுவில்லா வாழ்க்கையில்
தாயின் வயிற்றில் தோன்றும் முன்னே
உன்னைத் தெரிந்து கொண்டார்
வெகு தூரம் சென்ற உன்னை
ஆசையாய் பின் தொடர்ந்தார்
வா! வா! என்னிடம் வா! வா!
என்று உன்னை அழைக்கின்றார்
அவர் பாதம் வந்தாலே
உன் பாவங்கள் நீங்குமே
அவர் கரங்கள் பட்டாலே
உன் வியாதிகள் ஓடுமே – வந்துவிடு
நண்பர்கள் நகைக்கலாம்
பழகினவர் பகைக்கலாம்
பின்பற்று நீ இயேசுவை
விட்டு வந்த பாவங்கள்
உன்னை தொடரும்(நெருங்கும்) போது
உயிரோடு எழுந்த இயேசு
உன்னுடன் இருக்கிறார்
திகையாதே! நீ கலங்காதே!
நீ பதறிடாதே!
உன்னை தாயின் கருவிலே
உன்னைக் காத்துக்கொண்டவர்
உன்னை கடைசிவரையிலும்
காக்க வல்லவர்…
வந்துவிட்டேன் இயேசுவிடம்
தந்துவிட்டேன் என் வாழ்க்கையை
அவர் தான் எந்தன் தகப்பனே
என் வாலிபம் இயேசுவுக்கே!
நான் வருகிறேன்
என்னைத் தருகிறேன்
அவரிடம்