vanaththula oru natsaththiram

வானத்துல ஒரு நட்சத்திரம்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வானத்துல ஒரு நட்சத்திரம்
ஜொலிக்குதே வழி திறக்குதே
நட்ட நடு சாமத்திலே பிறக்குதே ஒளி பிறக்குதே
Chorus
வாருங்க வானத்து சொந்தங்களே – இந்த அதிசயத்தை பாருங்களே – 2
பச்ச கொழந்தையாக தெய்வமே – வந்து
பொறந்திருப்பத பாடுங்களே – 2
Stanza 1
கண்மணியே கண்ணாளனே
பேரழகே பெட்டகமே
பொன்னாரமே பூவாரமே
சிங்காரமே செந்தூரமே
சத்திரத்தில் சித்திரமே
சாய்ந்தாட வந்தாயோ
சத்தியமே சந்திரனே
சந்தோஷமே தந்தாயோ
வாக்கு மனிதராக
நம்மோடு குடிகொள்ள
இம்மானுவேலாக – 4
Stanza – 2
மார்கழியின் குளிரினிலே
மாமரியின் மடியினிலே
பால் வடியும் பூமுகமே
பாலகனே தாலேலோ
முத்தழகே முத்தமிழே
மூலவனே காவலனே
முத்துமணி ரத்தினமே
மூவுலக அதிசயமே
காலம் நிறைவேறவே
கடவுள் தேடி வந்தாரே
ஆராதிப்போமே- அவரை
ஆராதிப்போமே