Vanathilum Boomiyilum Lyrics

வானத்திலும் பூமியிலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வானத்திலும் பூமியிலும் மேலான நாமம்
நமக்காக பிதாவிடத்தில் பரிந்து பேசும் நாமம்
எனக்காக உனக்காக மன்றாடும் நாமம்
சூழ்நிலைகள் மாறினாலும் மாறாத நாமம்
இயேசுவின் நாமமே – (4)
இலவசமாய் அவர் கிருபையினால்
மீட்க்கப்பட்டேன் இயேசுவின் இரத்தத்தினால்
என்னை தகுதிபடுத்தினீரே
என்னை நீதியாக்கினீரே
என்னை பரிசுத்தப்படுத்தினீரே
குற்றம் இல்லாத மனதை தந்தீரே
1.எனக்காக சாபமானீரே
எனக்கு எதிரான ஆயுதம் முறிந்ததே-(2)
உந்தன் இரத்தத்தை சிந்தி
கிரயமாய் மீட்டு கொண்டீரே-(2)
2.எனக்காக ஏழையானீரே
எந்தன் ஏழ்மையை சுமந்து தீர்த்தீரே-(2)
எங்கள் ஐஸ்வரிய சம்பனரே
சம்பாதிக்கும் பெலன் தந்தீரே-(2)
எனக்காக மரித்தாரே
எல்லா பயத்தில் இருந்தும் விடுவித்தாரே-(2)
ஆவியின் பட்டயம் எனக்கு தந்தீரே
உம் வார்த்தையினாலே உலகத்தை ஜெயித்திடுவேன்-(2)