vanamengkum thoothar koottam

வானமெங்கும் தூதர் கூட்டம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வானமெங்கும் தூதர் கூட்டம்
ஆடி பாடும் மேய்ப்பர் கூட்டம்
அல்லேலூயா கீதம் பாடும் ஆனந்தம்
நல்ல உள்ளம் மண்ணில் வாழும்
நன்மை யாவும் மண்ணில் தோன்றும்
பூமி தன்னை மாற்றி கொள்ளும் நாள்தோறும்
வாழ்வின் பொன்னாளிதே
வசந்த காலமிதே
Happy Happy Christmas
Merry Merry Christmas
1. தாழ்மையின் உள்ளங்கள் வாழப்போகுதே
தாழ்ந்திடும் எண்ணங்கள் மாளப்போகுதே
ஆண்டான் அடிமை இனி இல்லையே
அன்பே பெரிது உலகினிலே
வந்தாரே வந்தாரே இயேசு ராஜா
சங்கீதம் பாட வேண்டும் முழு மூச்சா
2. பேதங்கள் பூமியில் மாற போகுதே
நியாயங்கள் நிச்சயம் ஆள போகுதே
கர்த்தரின் வார்த்தை நிறைவேறும்
கிருபை பனியாய் தினம் தூவும்
வந்தாரே வந்தாரே இயேசு ராஜா
சங்கீதம் பாட வேண்டும் முழு மூச்சா