vanam vittu poomi thottu – Vaanam Vittu Boomi Thottu

வானம் விட்டு பூமி தொட்டு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வானம் விட்டு பூமி தொட்டு – Vaanam Vittu Boomi Thottu
வானம் விட்டு பூமி தொட்டு
நம்மை மீட்டு தந்தார் பாட்டு
பாடி தாலாட்டு
இயேசு வந்த சேதி கேட்டு
நீங்கிடுதே பாவக்கட்டு
பாடிப் பாராட்டு
ரம்பம் பம் ஆரம்பம் தம்தம்தம் ஆனந்தம்
சம் சம் சம் சம் (2) என்றும் சந்தோஷம்
1.வானிலே பாடும் தூதரின் கீதம்
காவில் கேட்டதுவே
மேசியா இயேசு மண்ணில் அவதாரம்
மேய்ப்பர்கள் அறிந்தனரே
தாவீதின் ஊரின் தொழுவில்
தரணியை மீட்க வந்த
தேவக்குமாரன் இயேசுவை கண்டாரே
கண்குளிர கண்டு மகிழ்ந்தார்
கிடைத்திடா பாக்கியம் பெற்றார்
2.வானிலே வெள்ளி ஆடுதே துள்ளி
வானறிஞர் வியந்தனரே
யூதரின் இராஜா உலகாளும் இராஜா
பூமியில் பிறந்துவிட்டார்
தாராகை முன்னே செல்ல
தடைகள் யாவும் நீங்க
தாவீதின் ஊரின் சத்திரத்திலே
தேவமைந்தன் இயேசுவை கண்டார்
காணிக்கைகள் தந்து மகிழ்ந்தார்.