vanam poomi pataiththavare

வானம் பூமி படைத்தவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வானம் பூமி படைத்தவரே
உம்மை என்றும் ஆராதிப்பேன்
உமக்காய் வாழ வாஞ்சிக்கிறேன்
என்னை ஏற்றுக்கொள்ளுமே
உம்மை போல் உம்மை போல் யாருமில்லை
உலகில் சிறந்தவர் எவருமில்லை
நீரே என்றும் போதும்
அழுது புலம்பும் நேரம்
என் தோளின் மீது தொட்டு
உனக்கு துணை செய்வேன்
என்று சொல்லி அனைத்திரையா – உம்மை போல்
உந்தன் வசனங்கள் என் கால்களுக்கு தீபம்
உந்தன் நினைவுகள் என் இதயத்தின் மேன்மை ஐயா – உம்மை போல்