vana paran nam iyesu rajan

வான பரன் நம் இயேசு ராஜன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வான பரன் நம் இயேசு ராஜன்
மானிடராக வந்துதித்தார்
மானிடர் கோபம் போக்கவே
மன்னவன் மனுவானார்
ஆயர்களும் அதிசயிக்க
தூதர் ஆர்ப்பரிக்க
பாவ ஜீவியம் மாற்றிடவே
பாலகனாக வந்தார்
சத்தியமும் ஜீவனுமாய்
தலையின் உருவமாய்
பாசம் வைத்து இப்பூவினிலே
பாலகன் வந்துதித்தார்
உன்னதத்தில் மகிமையும்
பூவில் சமாதானமும்
இருளைப் போக்கவே கூறினீரே
உலகின் ஒளி வந்தார்