Vallavare Nallavare

வல்லவரே நல்லவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வல்லவரே நல்லவரே
என்றுமாய் என் தஞ்சமே
உம்மைப் போல மாற்றிடுமே
எந்தனை தந்தேனையா
உம்மைப் போல மாறிடவே
வார்த்தை என்றும் கைக்கொண்டு
உம் வழியில் நான் நடந்திடவே
போதனையை செய்வீரையா
உம்மை நம்பினேன் நடக்கும் என் இயேசுவே
நம்பும் எந்தன் நங்கூரமே
நம்பி வந்தேன் உம் பாதை
நம்பிக்கையில் நான் பெருகிடவே
நல்விசுவாசம் அளித்திடும் தேவா
நாடி வந்தேனே சமூகம் நீர் தந்திடும்
நம்மைப் போல ஒன்றாகவே
இணைய வேண்டி ஜெபித்தீரே
பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடவே
பரிந்துரைகள் செய்தவர் நீரே
காத்துக்கொள்ளுவீர் துணை எந்நாளுமே