vallamaiyullavar makimaiyanathai enakku seythare

வல்லமையுள்ளவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வல்லமையுள்ளவர் மகிமையானதை எனக்கு செய்தாரே
அவர் நாமம் பரிசுத்தமுள்ளது
அவர் இரக்கம் தலைமுறையாகவே என்றும் உள்ளதே – 2
என் ஆன்மா கர்த்தரையே மகிமைப்படுத்திடுதே
என் ஆவி இரட்சகரில் களிகூர்ந்திடுதே –
அடிமையின் தாழ்மையை நோக்கி பார்த்தாரே எல்லா சந்ததியும் என்னை பாக்கியவான் என்பாரே – 2
இழிவாய் கண்ட கண்கள் காண உயரத்தில் நிறுத்தினாரே
அவரோடு என்றும் மகிமையில் வாழும் பாக்கியம் தந்தாரே
ஏளனம் செய்தோரும் ஏக்கமாய் பார்க்கும் படி
கிருபையால் நிறைத்தாரே உன்னத மேன்மையை தந்தாரே – 2
வலியோரை அகற்றி எளியோரை உயர்த்தி நன்மையால் நிரப்பினாரே
அவரின் வார்த்தை நிறைவேற எனக்குள்
கிரியை செய்தாரே