Vaazhvalikintraar Yesu

வாழ்வளிக்கின்றார் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாழ்வளிக்கின்றார் இயேசு வாழ்வளிக்கின்றார்
வந்திடும் யாவரும் விந்தையில் மூழ்கிட
1. பாவிகள் என்றாலும் இயேசு பாசமாய் ஏற்கின்றார்
பண்புகள் இழந்தவர் பலமுறை விழுந்தவர்
பணிவுடன் மனமுடைந்தவரிடம் வந்திடில் – வாழ்
2. ஞானியர் என்றாலும் இயேசுநேசமாய் ஏற்கின்றார்
நன்னெறி அறிந்தவர் நடந்திட முயன்றவர்
நலம்பெறும் விழைவுடன் அவரிடம் வந்திடில் – வாழ்
3. தேவைகள் உள்ளோரை இயேசு தாவியே ஏற்கின்றார்
தம் நிலை உணர்ந்தவர் தளர்வுகள் அடைந்தவர்
தலை நிமிர்ந்துயர்ந்திட அவரிடம் வந்திடில் – வாழ்