Vaasalandai Nintru

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாசலண்டை நின்று
ஆசையாய்த் தட்டும்
நேசர் இயேசுவுக்குன் னுள்ளம் திறவாயோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று உன்னை அழைக்கிறாரே
(2)
1. ஆதரிப்பார் யாருமில்லை
யென்றெண்ணி
ஆதரை மீதினில் அலைந்திடுவாயோ
காணாத ஆட்டை தேடி வந்த
மேய்ப்பர்
கண்டுன்னை மந்தையிற்
சேர்த்திடுவார் (2)
2. அற்ப வாழ்வை நித்திய
வாழ்வு என்றெண்ணி
தற்பரன் தயவை தள்ளிடலாமோ
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்
3. பாவத்தினால் சாப ரோகத்தில் தொய்ந்து
மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
பாவத்தைப் போக்கிடும்
தூய உதிரத்தின்
ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புராயோ
4. வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு
இயேசுவல்லால் வேறு
இரட்சிப்பில்லை இரட்சண்ய நாள்
இன்றே வந்திடாயோ