vaarum manthar yaarum

வாரும் மாந்தர் யாரும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வாரும் மாந்தர் யாரும்
பெத்லேகேம் செல்லுவோமே
இயேசு ராஜன் அங்கு
பாலனாய் பிறந்தாரே
விண்தூதர் யாவரும் துதித்திட
வான் சாஸ்திரி பாலனை பணிந்திட
ஆரிராரோ ஆராரிரோ
தூங்கு பாலகனே (2)
1. சத்திரத்தில் இடமில்லையோ
மாட்டுத் தொழுதான் பஞ்சனையோ (2)
முன்னணை பாலனே
கருணை மனுவேலனே (2) – விண்தூதர்
2. மேய்ப்பர்களோ வயலில் தங்கி
மந்தைகளை காத்து வந்தார் (2)
தூதனின் ஒளி வந்து
நல்ல செய்தி சொல்லிற்று (2) – விண்தூதர்
3. தங்கம் வெள்ளி தூபவர்க்கம்
ராயர் மூவர் படைத்தனரோ (2)
உள்ளத்தை தருகிறேன்
இங்கு வந்து பிறந்திடு (2) – வாரும்
வாரும் மாந்தர் யாரும் பாடல் வரிகள், Vaarum Maanthar Yaarum Lyrics