vaariro vinai tamil christian keerthanai

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாரீரோ வினை தீரீரோ எனைக்
காரீரோ ஜீவன் தாரீரோ யேசு
வாரேனென்றீர் வரந் தாரேனென்றீர் சுவாமீ
பாரினிலே யெனக்கு யாருமில்லை துணைக்கு
தேனே மரிமகனே தேடி மறுகுங் கோனே
சேனைகளின் சீமோனே சிந்தை கலங்கி நானே
கானகமே மேவும் மானது போலானேன்
வானகம் போன தேவா ஏனோ வரத் தாமதம்
அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம்
இட்டப் படுத்தவல்லோ கிட்ட வளையது பார்
அடுத்தாலோ அம்பைத் தொடுத்தாலோ என்ன
அடுபடையாக நின்று தடு படை செய்வீர் யேசு
காணாத ஆட்டைத் தேடிக் காடெங்கும் சென்ற கோன் நீர்
கண்டு பிடித்த ஆட்டைக் கொண்டு தொழுவஞ் சேர்க்கக்
கருத்துடனே மிக உரித்துடனே இரு
கரத்திலேந்தி வலப் புறத்தில் வைப்பீர் திண்ணம்
வீடு எனக்குச் செய்ய மேலோகம் போன தேவா
கூட இருத்தி வைக்கக் கூப்பிட வாறேனென்றீர்
கொண்டு வருவீர் முடி நின்று வருவீர் நொடி
கண்டு மகிழ்வேன் கூடி நின்று புகழ்வேன் கெடி