Vaanam Vaazhththattum Vaiyam Poerrattum

வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்
பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்
பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2)
Merry (4) Christmas (4)
வானம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே
மேகம் சிந்தும் தூவானம் தேனாக மாறிடுதே
குளிரும் பனியும் வாட்டிட
குளிரில் கோமகன் தூங்கிட
விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்
விண் பாலனோடு விளையாடவே
வா வா வா வானத்து வெண்ணிலவே – வானம்
ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே
ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே
அன்னை மரியின் மடியிலே
அன்பின் ரூபம் ஆனாரே
எனை மீட்க வந்த தேவ மைந்தனே
எனை பாடவைத்த இயேசு பாலனே
வா வா வா வாழ்த்து பாடுகிறேன்