Vaanam intru Vaalthu paadal paada lyrics

வானம் இன்று வாழ்த்து பாடல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வானம் இன்று வாழ்த்து பாடல் பாட வந்ததோ
வண்ண மேகம் இன்று தாளத்தோடு ஆட வந்ததோ -2
என்ன விந்தை இது என்ன ஜாலம்
மண்ணின் மீது பாலன் வந்ததாலே -2
உலகெங்கும் ஒளி வெள்ளமே
நாளும் மங்காத பேரின்பமே-2 -வானம் இன்று
1.தூதனே வின் தூதனே நல்ல செய்தி சொல்ல வந்தாயோ
பாலனே சின்ன பாலனே விண்ணை விட்டு மண்ணில் வந்தாயோ -2
உன்னை போல் ஒரு பாலகனை முன்ன பின்ன கண்டதில்லையே
நீரின்றி என் வாழ்வினிலே நிலையானது ஒன்றுமில்லையே -2
என்னில் நிலையானது ஒன்றுமில்லையே -வானம் இன்று
2.கானமே இனிய கானமே இன்னிசையில் கலந்து வந்தாயோ
ஏழ்மையோ கந்தை கோலமோ எங்கள் மீது பாசம் கொண்டாயோ -2
மான்கள் கூட்டம் உம் அருகே துள்ளித்துள்ளி ஆட வந்ததோ
குயில்கள் கூட்டம் கூவி கூவி பாட சொல்லி தூது வந்ததோ-2
என்னை பாட சொல்லி தூது வந்ததோ -வானம் இன்று