vaanam boomiy yaavaiyum

வானம் பூமி யாவையும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வானம் பூமி யாவையும்
படைத்த தேவனே
உம் வல்லமை வார்த்தையால்
படைத்த தேவனே
தேவனே தேவனே
சூரியன் சந்திரனை
நீர் படைத்தீர் ஆ… ஆ…
மழை கடல் தண்ணீரை
நீர் படைத்தீர்
புல் பூ தாவரங்கள்
நீர் படைத்தீர்
உயிரினங்கள் யாவும்
நீர் படைத்தீர் ஆ… ஆ…
ஊரும் பிராணிகளை
நீர் படைத்தீர்
பறக்கும் பட்சிகளை
நீர் படைத்தீர்
ஆதாம் ஏவாளை
நீர் படைத்தீர் ஆ… ஆ…
ஆசீர்வாதங்களை
அள்ளி கொடுத்தீர்
எல்லா உரிமையும்
எமக்கு தந்தீர்