Vaanam Boomi Padaitha Yesuvae song lyrics

வானம் பூமி படைத்த இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வானம் பூமி படைத்த இயேசுவே – உம்மை
வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்
ஆவியோடும் உண்மையோடும்
ஆராதிக்கின்றோம்
1.வல்லவரும் நல்லவரும் நீரே – உம்மை
வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் – 2
2.பரிசுத்தரும் பெரியவரும் நீரே உம்மை
பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்
3.உயர்ந்தவரும் சிறந்தவரும் நீரே
உம்மை உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
4.ஆறுதலும் தேறுதலும் நீரே – உண்மை
அன்பில் நாங்கள் ஆராதிக்கின்றோம்
5.மகிமையும் மாட்சிமையும் நீரே – உம்மைப்
மகிழ்ந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்
6.இனிமையும் இன்பமும் நீரே – உம்மை
என்றும் நாங்கள் ஆராதிக்கின்றோம்
7.கிருபையும் சத்தியமும் நீரே
உம்மை கரம் உயர்த்தி ஆராதிக்கின்றோம்