Vaakkugal niraiverum kaalam

காளைகளின் பெரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாக்குகள் நிறைவேறும் காலம்
சூழ்நிலை மாறிடும் நேரம்
காளைகளின் பெரும் பெலத்தை தந்தார்
அவந்திரம் செழிப்பானதே
காளைகளின் வலிமை தந்தார்
வெட்டாந்தரை வயலானதே
கரம் பிடித்தார் என்னை நடத்துகிறார்
உயர்வான வாழ்வை தந்தார்
1. கவலை எல்லாம் நீங்கினதே
கலங்கிடக்கூடாமல் செய்திட்டீரே
குழப்பமெல்லாம் ஓடினதே
ஆத்துமாவில் மகிழ்ச்சியை தந்திட்டீரே
எண்ணங்களில் வாழ்வை தந்தீர்
எல்லைகள் பெரிதாக்கினீர்
என் கரங்களை நீர் விதைக்க செய்தீர்
அனைத்தையும் வாய்க்க செய்தீர்
2. காத்திருந்த காலமெல்லாம்
வார்த்தையினால் என்னை காத்துக் கொண்டீர்
பாதைகள் தெரியாத நேரமெல்லாம்
ராஜ்ஜியத்தின் வாசலை திறந்து வைத்தீர்
உலகத்தை ஜெயித்திடும் பலனை தந்தீர்
உயரத்தில் நிறுத்தி வைத்தீர்
அரண்மனை வாசல்கள் திறக்க செய்தீர்
அரியணையில் அமர வைத்தீர்