uyirthezlunthare Yesu

உயிர்த்தெழுந்தாரே இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

விடியலின் வாழ்த்தொலி கேட்கிறதே
ஆனந்தப் பேரொலி எழுகிறதே !
சாவின் சங்கிலி உடைகிறதே
மானுடம் மீட்பை அடைகிறதே
பழையவை எல்லாம் அழியட்டுமே
இறைவனின் அருள்மழை பொழியட்டுமே
உயிர்த்தெழுந்தாரே அல்லேலுயா… – விடியலின்
ஏழ்மை வாழ்க்கை நம்மை அழைத்தால்
தொழுவம் நினைவில் மலரட்டுமே !
துயரம் நம்மைச் சுற்றிப் பிடித்தால்
சிலுவைக் காட்சி தெளியட்டுமே !…2
அனைத்தும் கடந்த இறைவன்
அன்பின் கவலை மறப்போம் !
மீட்பை அளித்த இறையின்
கரத்தில் நம்மை அளிப்போம்!
உயிர்த்தெழுந்தாரே
அல்லேலூயா…. -விடியலின்
வாசல் இல்லை என்று நினைத்தால்
விடியல் வெளிச்சம் தெரியட்டுமே.
அலகை சூழ்ச்சி வென்று ஒழித்தார்
இறையின் மேன்மை புரியட்டுமே!…2
ஆதிப் பாவம் முழுதும்
அழித்த இறைவன் அல்லவா !
அருளைப் பொழியும் அவரின்
வழியில் நாளும் செல்லவா !
உயிர்த்தெழுந்தாரே
அல்லேலூயா…. -விடியலின்
அல்லேலூயா