Uyirthezhunthar lyrics

உயிர்த்தெழுந்தார்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

உயிர்த்தெழுந்தார் x 3
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
இயேசு உயிர்த்தெழுந்தாரே
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தாரே (2)
கல்லறையோ பாதாளமோ அதிகாரமோ வல்லமையோ (2)
உயிர்த்தார் உயிர்த்தார் நம் தேவன்
ஜெயித்தார் ஜெயித்தார் நம் தேவன் (2)
1. உலகத்தின் இரட்சகர் நம் தேவன்
பாவிகளை இரட்சிக்க வந்தாரே
மெய்யான தேவன் உண்மையுள்ள தேவன்
நம்மை என்றும் நடத்திடுவார்
தடுத்து நிறுத்தவே முடியாதே
எதிர்த்து நிற்க முடியாதே (2) – உயிர்த்தார்
2. மரணத்தை ஜெயித்த நம் தேவன்
ஜவன் பெலன் சுகம் தந்தாரே
பரிசுத்த தேவன் வல்லமையின் தேவன்
ஜெயம் தந்து நடத்திடுவார்
தடுத்து நிறுத்தவே முடியாதே
எதிர்த்து நிற்க முடியாதே (2) – உயிர்த்தார்
3. சாவை வெற்றி கொண்ட தேவன்
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரே
பரலோகம் சென்ற பரிசுத்த தேவன்
திரும்பவும் வந்திடுவார்
தடுத்து நிறுத்தவே முடியாதே
எதிர்த்து நிற்க முடியாதே (2) – உயிர்த்தார்
4. மரணத்தை ஜெயம் கொண்ட தேவன்
சாத்தானின் கோட்டையை வென்றாரே
அதிகாரங்களை மேற்கொண்ட தேவன்
கரம்பற்றி நடத்திடுவார்
தடுத்து நிறுத்தவே முடியாதே
எதிர்த்து நிற்க முடியாதே (2) – உயிர்த்தார்
உயிர்த்தெழுந்தார் இயேசு பாடல் வரிகள், Uyirthelunthar Yesu lyrics