uyirarra utal siluvaiyile

உயிரற்ற உடல் சிலுவையிலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

உயிரற்ற உடல் சிலுவையிலே
உறைந்த ரத்தங்களின் தொங்கல்
ஊடுருவிய ஆணிகளும் முள்முடியும்
உன் பாவத்தால் விளைந்த
கொடுமையன்றோ!
1. மகதலேனா தைலம் இட்ட
தலை சாய்ந்ததே!
மாபாவிகள் நம்மால் விளைந்ததே!
முள் கிரீடம் பாய்ந்ததாலே
அந்த முகரூபம் கோரமானதே!
2. யோவான் சாய்ந்த
நேசரின் நெஞ்சமே
சேவகனின் ஈட்டி பாய பிளந்ததே!
ஓடிவந்த இரத்தமும் நீரும் ஓய்ந்த உடல்மீது வடிந்ததே!
3. மனம் திரும்பு என்றார் தேவன் உன்னையே
மௌனம் இன்னும் சாதிப்பது ஏன் மகனே ?
இதுவே தருணம் இதுவே சமயம் ஓடிவா-என் நேசரின் பாதம்!