uyarvana itangkalil amarnthiruppen

உயர்வான இடங்களில்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

உயர்வான இடங்களில் அமர்ந்திருப்பேன்
எட்டாத உயரத்தில் நிலைத்திருப்பேன்
கன்மலை தேனினால் திருப்தியாவேன்
பரலோக நன்மையால் நிறைந்திருப்பேன்(2)
ஆத்துமாவே நீ நன்றி சொல்லு
கர்த்தரில் மனமகிழ்ச்சி அடைந்திரு -2
அவர் சொன்ன வார்த்தைகள் நிறைவேறும்
நீ அவரில் களிகூரு -2
சுகவாழ்வு உன்னில் துளிர்த்திடுமே
கர்த்தரின் மகிமை உன்னை காக்குமே -2
உன் நீதி உனக்கு முன்னே சென்றிடுமே
கழுகை போல் உயர பறந்திடுவாய் -2 – ஆத்துமாவே
நித்தமும் உன்னை நடத்திடுவார்
வறண்ட எல்லா நாட்களிலும் -2
ஆத்துமாவை என்றும் திருப்தியாக்கி
வளமான வாழ்வை தந்திடுவார் -2 – ஆத்துமாவே