utanpatikkaiyin theyvam neere

உடன்படிக்கையின் தெய்வம் நீரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

உடன்படிக்கையின் தெய்வம் நீரே
உயிரோடு கலந்தவர் நீரே
உலகில் வாழும் மக்களுக்காக
உயிர் தந்த தெய்வம் நீயே
இரத்தத்தின் உடன்படிக்கை இரட்சித்தீர் இரத்தம் சிந்தி
உப்பைப் போல் மாற்றி விட்டீர்
வாழ்வின் சுவையாக என்றென்றும் கனியாக
பொன்னைப் போல் கண்ணைப் போல
எந்தன் உடனிருந்து கண்விழித்துக் காத்துக்கொண்டீரே
உந்தன் அன்பு தந்து உம்மோடு சேர்த்துக் கொண்டீரே
யேதேனின் உடன்படிக்கை தேவனால் வந்த சொந்தம்
விதையாய் முளைக்கச் செய்தீரே
இயேசுவாய் வந்த தெய்வம் தீமைகள் போக்கும் தெய்வம்
பூவைப் போல் வாசம் வீசி
என்னைச் சிறக்கச் செய்து தாயைப் போல் தேற்றி விட்டீரே
என்னை மார்போடு பாசமாய் அணைத்துக் கொண்டீரே
தாவீதின் உடன்படிக்கை நிச்சயமாய் கிருபை தந்தீர்
சின்னவன் ஆயிரமாக
பலத்த ஜாதியுமாய் பெருகிடும் பூமியிலே
என்று நீர் வாக்கு தந்தீர்
அந்த உடன்படிக்கை பூமியில் நிறைவு பெற்றதே
எங்கள் இயேசு தெய்வம் என்றுமே ஆசி தந்தீரே