urukkulainthu pookuthoo – Urukulaindhu Pogutho

உருக்குலைந்து போகுதோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho
உருக்குலைந்து போகுதோ இந்த பச்சை மரம்
நிலைக்குலைந்து போகுதே இந்த பச்சை மரம்
எனக்காக காயங்கள் பட்ட மரம்
இந்த பட்ட மரத்துக்காய் பலியாகும் பச்சை மரம் -2
கெத்சமனே தோட்டத்திலே
கதறினதோ வேர்வையெல்லாம்
இரத்தமாக தெறிக்கிறதோ -2
துடித்தீரோ துவண்டீரோ
தூதர் வந்து உம்மை தேற்றினாரோ -2- உருக்குலைந்து
போதகரே என்றழைக்கும் சத்தத்திலே
கட்டி அணைத்து காட்டி
கொடுத்தான் முத்தத்திலே-2
மறுதளித்தான் மூன்று முறை
அவன் மனம் திரும்ப நீர் பார்த்தீரோ -2- உருக்குலைந்து
குருசை சுமந்து மரிப்பதென்று தீர்ப்பினிலே
கல்வாரி மலை மேலே சிலுவையிலே -2
ஆணிகளால் உம்மை துளைத்தாரோ
ஈட்டினால் நெஞ்சை பிளந்தாரோ -2- உருக்குலைந்து