unthan sitham enthan valvil

உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்
நான் செய்திட - ஆட்கொண்டு
நடத்திடும் என் தேவ தேவனே -2
எந்தன் விருப்பம் எந்தன்
வாழ்வில் ஒழியவேண்டுமே
உந்தன் விருப்பம் எந்தன்
வாழ்வில் செய்ய வேண்டுமே-2
இயேசு தேவனே என்னை நான் தருகிறேன்
உந்தன் விருப்பம் போல என்னை
வனைந்து கொள்ளுமே
உலக ஆசை உலக விருப்பம்
என்னில் மாறவே
புதிய இதயம் தந்து என்னை
ஆண்டு நடத்துமே
இயேசு தேவனே என்னில் உந்தன் சாயலே
நாள்தோறும் வளர்ந்திட
தந்தேன் என்னையே
என்னை நினைக்கும் நினைவு
என்னில் மறையவேண்டுமே
உம்மை நினைக்கும் நினைவு
என்னில் பெருகவேண்டுமே
இயேசு தேவனே என்றும்
உம்மை நினைக்கவே - எந்தன்
மனதை மறுரூபமாக்க வேண்டுமே