unthan pathame thanthen enthan iyesuve

உந்தன் பாதமே தந்தேன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

உந்தன் பாதமே தந்தேன் எந்தன் இயேசுவே
ஏற்று கொள்ளுமே என்னை தாங்கி காருமே
பந்த பாசங்கள் வந்து என்னைத் தாக்குதே
சொந்த பாவங்கள் எல்லாம் சூழ்ந்து நிற்குதே
முந்து மானிடம் செய்த பிழைகள் அனைத்துமே
உந்தன் பாதமே தந்து அர்ப்பணிக்கின்றேன்
துன்பப்படும் மாந்தரின் துன்பம் மாற்றிட
எண்ணம் இல்லா மாந்தனாய் வாழ்ந்து கழித்தேனே
துட்டத்தனம் நீக்கியே ஏற்றுக் கொள்ளுமே
வாசம் வீசும் வாழ்வினை தாரும் நாதனே
கற்ற பெருமை உள்ளினில் திமிராய் போனதே
மற்றவரை ஏற்றிட உள்ளம் மறுக்குதே
உற்ற உறவாய் வாழ்வினில் அன்பை பகிர்ந்திட
உந்தன் ஆவியை என்னில் நிறைவாய் நிரப்புமே