unnodu naaniruppaen

உன்னோடு நானிருப்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னோடு நானிருப்பேன்
உனக்காய் யாவையும் செய்திடுவேன்
கண்மணிபோல உன்னை
கருத்தாய் காத்திடுவேன் -2
1. ஊழியம் செய்யும் உத்தமனே
ஓட்டம் துவங்கும் காலமீதே -2
எழுந்து திடன்கொள் என் மகனே
எழும்பி பிரகாசி என்றேனே
உன்னோடு நான் இருப்பேன்
உனக்காய் யுத்தம் செய்வேன்
2. தெரிந்து கொண்ட என் ஜனமே
உன் ஜெபம் கேட்க நான் வருவேன்
அழியும் தேசத்தை காப்பாயா
எனது பாரம் சுமப்பாயா
என் மனம் உனை தேடுதே
எழுந்து ஜெபம் செய்வாய்
3. துன்பம் உன்னை சேரும்போது
துவண்டு போகாதே என் மனமே
தானியேல் போல ஜெபித்திடுவாய்
தாவீது போல எழும்பிடுவாய்
புதுபெலன் தந்திடுவேன்
அன்போடு நடத்தி செல்வேன்