unnathangkalile katavulukku matsi – Unnathangalilae Kadavulukku maatchi

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி – Unnathangalilae Kadavulukku maatchi
ஆண்டவரே, இரக்கமாயிரும்
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக
உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக
உம்மைப் புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம், ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே
ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே
தந்தையின் திருமகனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும், தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும். ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்,
நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின் மாட்சியில்
இருப்பவர் நீரே – (ஆமென்) – 4.