unnathamaana nizhal

உன்னதமான நிழலின் கீழ்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னதமான நிழலின் கீழ்
தங்குவேன் நாள் முழுதும்
அடைக்கலமான தேவனையே
நம்புவேன் காலமெல்லாம்
அவர் வார்த்தைக்குள் கலந்திடுவேன்
புது பாதைகள் பிறந்திடுமே
அவர் வார்த்தைக்குள் தங்கிடுவேன்
கிருபை என்னை சூழ்ந்திடுமே
வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னோடு இருப்பவர்
வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றென்றும் இருப்பவர்
உம்மை வாஞ்சித்தேன் விடுவித்தீரே
அறிந்து கொண்டேன் உயர்த்தினீரே
உம் கிருபையினால் உம் செயல்களினால்
என்னை மகிழ்ந்திட செய்து விட்டீர்
ஆலயத்தில் நாட்டி வைத்தீர்
பிரகாரங்களில் செழிப்பாக்கினீர்
உம் நீதியை விளங்கிட செய்து விட்டீர்
என்னை பசுமையாய் ( பலவானாய்) மாற்றி விட்டீர்
Unnathamaana Nizhal Lyrics உன்னதமான நிழலின் கீழ் பாடல் வரிகள்