unnatha vallamaiyai iraiva enakku

உன்னத வல்லமையை இறைவா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

உன்னத வல்லமையை இறைவா – unnatha vallamaiyai iraiva
உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்
பரலோக வல்லமையை இந்நேரம் ஊற்றுமைய்யா -2
1.உலர்ந்து போன எலும்புகளாய்
உலரப்பட்ட எங்களிலே -2
உயிர் தரும் ஆவியைத் தந்து
வீரச்சேனையாய் மாற்றிடுமே -2
2.வாக்களித்த வல்லமையை
பெந்தேகோஸ்தே நாளினிலே -2
பொழிந்த இறைவா எங்களிலும்
நிரம்பி வழியச் செய்தருளும் -2
3.அடிமை விலங்குகள் தகர்ந்திடவே
அக்கினி ஆவியை ஈந்திடுமே -2
தடைகளும் களைகளும் எரிந்திடவே
மீட்பின் ஆவியை ஊற்றிடுமே -2
உன்னத வல்லமையை இயேசுவே