unnatha alaipin

உன்னத அழைப்பில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னத அழைப்பில் நான் நிலைத்திறுப்பேன்
உம் சேவை என்றென்றும் தொடர்ந்திடுவென்
உம்மை என்றும் பின் சென்றிடுவேன்
உம் மகிமைக்காய் நான் வாழ்ந்திடுவேன்
உம் சித்தமே என் வாஞ்சையே
இராப்பகலாய் நான் கதறுகின்றேன் (2)
1. அதிகாலையில் நான் உம்முகம் தேடுவேன்
ஆர்வமாய் உம்மை தரிசித்திடுவேன்
உன்னத அழைப்பிற்க்காய் தியாகம் செய்வேன்
உம் சித்தம் நிறைவேற அர்ப்பணித்தேன்.(2)
2. சிலுவையின் அழைப்பினை ஏற்றவனாக
அனுதினம் சுமக்க ஆயத்தமானென்
என்னையும் வெறுத்தேன் உமக்காய் கொடுத்தேன்
அதி உம் சித்தம் என்னில் நிறைவேற்றுவேன்