unnaith theti vanthen sumai theerum amma

உன்னைத் தேடி வந்தேன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

உன்னைத் தேடி வந்தேன் சுமை தீரும் அம்மா
உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா
முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் நீரில் தவித்த கப்பலைக் காத்தாய் (2)
பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய்
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய் — (உன்னைத் தேடி…)
கடல் நீரும் கூட உன் கோவில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
அருள் தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம்
அன்பாகி எமக்கு அருள் தாரும் அம்மா — (உன்னைத் தேடி…)
உன்னைத் தேடி வந்தேன் பாடல் வரிகள், Unnaithedi vanthen sumai Lyrics