unnai vittu nan vilakuvathillai

உன்னை விட்டு நான்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னை விட்டு நான் விலகுவதில்லை
என்றென்றும் உன்னை கைவிடுவதில்லை
கைவிடாதிரும் தேவா கைவிடாதிரும் 2
உனக்குச் சொன்னதை செய்யும் அளவும்
கைவிடுவதில்லை மறப்பதில்லை
பொய் சொல்ல நான் ஒரு மனுபுத்திரன் அல்ல
நான் உன்னை கரம் பிடித்த தேவன் அல்லவா
சொல்லியும் நான் செய்யாதிருப்பேனோ
செய்து முடிக்க சர்வ வல்லவர்
அனாதி தேவன் உன் அடைக்கலம் அல்லவா
யெசூரன் என்று உன்னை அழைத்தவரல்லவா
திக்கற்றவர்களின் சகாயர் நீரே
கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சம் நீரே
என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்
பரிசுத்தவானின் அழிவை காண வொட்டீர்
கர்த்தர்தாமே உனக்கு முன் செல்வார்
கூட இருப்பார் துணையும் செய்வார்
பெலன் கொண்டு நீ திடமனதாய் யிரு
என்று உனக்கு சொன்னதில்லையா