unnai azhaikkum yesuvin

உன்னை அழைக்கும் இயேசுவின்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.

உன்னை அழைக்கும் இயேசுவின் – Unnai Alaikkum Yesuvin
உன்னை அழைக்கும் இயேசுவின்
சத்தத்தை நீ கேளாயோ
உன்னைத்தேடி வரும் இயேசுவை
உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளாயோ
1.உன் பாவ பாரமெல்லாம்
தன் தோளில் சுமந்தாரே
அவர் பட்ட காயம் நீ செய்த பாவம்
ஆனாலும் அழைக்கிறார் வா
ஐங்காயம் அடைந்தாரே
சிலுவையில் மரித்தாரே
அவர் பட்ட பாடு உனக்காகத் தானே
உள்ளம் கலங்காதே வா
பேர் சொல்லி அழைத்தாரே
இரத்தத்தால் மீட்டுக் கொண்டாரே
கரங்களை நீட்டி அன்போடு உன்னை
அழைக்கிறார் இப்போதே வா