unmai nanpan oruvarai kanten

உண்மை நண்பன் ஒருவரை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உண்மை நண்பன் ஒருவரை கண்டேன்
உள்ளம் திறந்து என் கதை சொன்னேன்
கள்ளம் எண்ணில் இல்லை என்று கண்டார்
எண்ணம் எல்லாம் சரியாய் புரிந்து கொண்டார்
1.காலையில் எழுந்ததும் ஆவலாய் சொல்வேன்
கவலைகள் அனைத்தையுமே
சுமைதாங்கி இயேசு சுமந்திடுவாரே
கவலைகள் யாவும் பறந்திடுமே
2.ஆபத்தில் உதவாத நண்பர்கள் ஆயிரம்
அரை வழியில் பிரிந்தது உண்டு
நல் நண்பர் இயேசு என் நிலை அறிந்து
ராப்பகளை என்னை காத்திடுவார்
3.உயிராய் நேசிக்க ஒருவரும் இல்லையா
என்றுமே என் மனமே
உயிரிலும் மேலாய் உன்னையும் நேசிப்பேன்
என்றாரே என் ஆத்தும நேசரே.