ungka kirupa nalla kirupa

உங்க கிருப நல்ல கிருப

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க கிருப நல்ல கிருப
என்னை வாழ வைத்ததே
உங்க கிருப மாறா கிருப
என்னை சூழ்ந்து கொண்டதே ….(2)
ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே
ஒவ்வொரு நிமிடமும் நடத்துகின்றதே…(2)
1.அக்கினியில் விழுந்தாலும்
எரிந்து போவதில்ல
தண்ணீர்மேல் நடந்தாலும்
மூழ்கிப் போவதில்ல….(2)
முன்னும் பின்னும் நெறுக்கி என்னை
நடத்திடும் கிருப
என்னோடு உடன்படிக்கை
செய்திட்ட கிருப….(2)
2.தன்னிடத்தில் வருவோரை
தள்ளாத கிருப
தள்ளாடும் வேளைகளில்
தாங்கிடும் கிருப
நிழலாய் என்னோடு வருவது கிருப
என்னை விட்டு விலகாத
இயேசுவின் கிருப….(2)
3.ஆதாமும்,ஏவாளும்
பாவத்தை செய்தபோதும்
உந்தன் மகிமை விட்டு
விலகிப்போனபோதும்
ஜீவனை எடுக்காமல் தோலாடை தந்து
உயிரோடு வைத்த உம் கிருப பெரியது