Unga Anbukku Ellai Illa

உங்க அன்புக்கு எல்லை இல்ல

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க அன்புக்கு எல்லை இல்ல
உங்க பாசத்திற்கு முடிவே இல்ல
எல்லாராலும் வெறுக்கப்பட்டேன்
நீர் வெறுக்காமல் மடியில் வைத்தீர்
தனிமையிலே நான் தவித்த போது
துணை நின்று காத்தீர் அப்பா
எல்லை இல்லா நேசங்கள் – (2)
உம்மிடம் உண்டென்று அறிந்தேன் ஐயா – (2)
என் கண்ணிலே நீர் வழிந்தால்
உங்க கரம் என்னை துடைக்குதப்பா
துன்பத்தினால் நான் வாடும் போது
உம் கரம் என்னை தேற்றுதப்பா
எல்லை இல்லா அன்புகள் – (2)
உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா – (2)
எதிரிகள் என்னை நெருங்கும்போது
தடுத்தென்னை காத்தீர் அப்பா
ஆபத்து எனக்கு வரும்போது
துணை நின்று காத்தீர் அப்பா
எல்லை இல்லா பாசங்கள் – (2)
உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா – (2)
உங்க அன்புக்கு எல்லை இல்ல பாடல் வரிகள், Unga Anbukku Ellai illa Lyrics