unakkum vendam ondrum

லோகம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

லோகம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்
" உண்மை இயேசு எனக்குப் போதும்
1. உலக சிற்றின்பம் மாயையாகும்
உணர்ந்து வாழ்ந்தால் உவகை பெறலாம்
உத்தமர் இயேசு உன்னை அழைக்கும்
உன்னத சத்தம் நீ இன்று கேட்பாய்
2. காலம் கடைசி அன்பு தணியும்
கர்த்தர் வருகையை நமக்கு பெறலாம்
கள்ள கிறிஸ்துக்கள் எழும்பி வந்து
நல்லோரைப் பகைத்து நாசம் அடைவார்
3. வானம் பூமி ஒழிந்து போகும்
வார்த்தைகள் என்றும் நிலைத்து நிற்கும்
விசுவாசப் பாதை உன்னத சிலுவை
வீரமுடன் நாம் சென்றிடுவோம்