unakkum enakkum enakkum unakkum

உனக்கும் எனக்கும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உனக்கும் எனக்கும் எனக்கும் உனக்கும்
என்ன ? வேனுங்க
இயேசு ராஜன் அன்பு ஒன்றே
நமக்கு போதுங்க -2
1.சுத்திசுத்தி தேடிவரும்
பரிசுத்தரின் அன்பு
தாவிதாவி அனைக்க வந்த
தாயைபோல அன்பு -2
முந்தி முந்தி ஓடிவரும்
முன்னவர் இயேசுவின் அன்பு -2
முழங்காலில் நின்றால் உண்டு
முடிவில்லாத அன்பு -2- உனக்கும்
2.உத்திரவாதமில்லாதது இல்லாதது
உலகம் காட்டும் அன்பு
உத்திரமுள்ளது இந்த
உன்மை தேவன் அன்பு -2
சகல பாவங்கள் நீக்கி இரட்சிக்கும்
இரட்சகர் இயேசுவின் அன்பு -2
சகல வாழ்வு கொடுக்கும் அன்பு
சாந்த முள்ள அன்பு -2- உனக்கும்
3.கொஞ்ச காலத்தில் முடிந்துவிடும்
கனவன் மனைவி அன்பு
காலம் முழுவதும் காக்கும் எங்கள்
கர்த்தர் இயேசுவின் அன்பு -2
அள்ளி அனைக்கும் எங்கள் அன்பர்
இயேசுவின் அன்பு -2
அளவிட முடியாதது
ஆண்டவர் இயேசுவின் அன்பு -2- உனக்கும்
உனக்கும் எனக்கும் பாடல் வரிகள், Unakkum Enakkum Lyrics