unakkethiray ezhum

அன்பின் தோழனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உனக்கெதிராய் எழும்
தீமைகள் ஓடச் செய்வார்
உன் செயல்களினால் அவை
என்றென்றும் அழியச் செய்வார்
நம் அன்னை மரி அன்பில்
அமர்ந்து கொள்வாய் – அவர்
மகன் இயேசு பாதத்தில்
பணிந்து கொள்வாய் – இன்று
உண்மை அன்பின் உள்ளுரும் பாசம்
உறவே நாளும் மறையாது நேசம்
எந்தன் ஜீவன் நீரே இயேசுவே
காக்கும் தேவன் என்னில் இருக்க
கலக்கமோ இல்லை உம் கரம் என்னை காக்க
தோள் கொடுக்கும் தோழன் நீயே
அன்பின் தோழனே
மறை பொருளே பரமன் நீரே
என் வாழ்வின் கலங்கரை நீர் தானே
நம்பிக்கையில் நாளும் வாழ
உன்னை தந்து என்னை மீட்டாயே
கண்ணின் மணியாய் என்னை காக்கின்றாய்
தேற்றும் கரமாய் என்னை தாங்கினாய்
உன்னில் நானும் சேயாய் வாழுவேன்
சிறகின் நிழலில் சிரம்தாள் பணிந்திடுவேன்
நான் தவரும் வேலையில் உம் கரத்தால் பிடித்திடுவாய்
தாயாய் அன்பிலே எனை நாளும் நடத்திடுவாய்
மறை பொருளே பரமன் நீரே
என் வாழ்வின் கலங்கரை நீர் தானே
நம்பிக்கையில் நாளும் வாழ
உன்னை தந்து என்னை மீட்டாயே